“நம் பண்ணைக்கழகம்” (Nam Farmversity)

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்,
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்,
சாந்த விறகின் உவித்த புன்கம்,
கூதளங் கவினிய குளவி முன்றில்,
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி,
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும!
புறம் : 168

இத்தகைய சிறப்பு பொருந்திய தைத் திருநாளில் நம்மாழ்வார் பன்மையக்கழகத்தின் அங்கமாக, செயல்வடிவமாக “நம் பண்ணைக்கழகம்” (Nam Farmversity) துவங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மண்ணும் மக்களும் இன்பமும் நிறைவும் சூழ வாழ வேண்டும், அதே வேலையில் இப்புவியின் நித்தியத் தன்மையில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தாத வேளாண் வாழ்வியல் முறைகளை முன்னெடுப்பது, சூழலியலுக்கு உகந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது, அதற்கான மாதிரி வடிவங்களை உண்டாக்குவது, அரசியல் மற்றும் நெறிசார் உரையாடல்களை முன்னெடுப்பது “நம் பண்ணைக்கழகத்தின்” நோக்கங்கள்.

நம்மாழ்வாரின் கூற்றுப்படி விதைத்துக் கொண்டே இருப்போம், முளைத்தால் மரம் இல்லையேல் மண்ணுக்கு உரம். எப்போதும் போல இயங்கிக் கொண்டே இருப்போம்.

NamFarmversity is an initiative of Nammalvar Multiversity.
We will soon be offering perspective building (breaking) talks and short and long term programmes on subjects including Diversity and Seeds, #Decolonising Farm Practices, Livelihoods and Local Economy building, and much more.

அன்பும் நன்றியும்.
நம்மாழ்வார் பன்மையக்கழகம்.