OUR STORY SO FAR…

OUR STORY SO FAR…

JUNE 2023 | VOL.1

PERIODIC NEWS LETTER FROM THE NAMMALVAR MULTIVERSITY

பன்மையக்கழகத்தின் பயணம்

பாஸ்கர் மணிமேகலை

நம்மாழ்வார் பன்மையக்கழகத்தின் பயணம் குறித்து எழுதுவதற்கு முன்பு பன்மையக்கழகம் (multiversity) எனும் வார்த்தை சமீப காலங்களில் பெருநிறுவனங்கள், சினிமா, இலக்கியங்கள் மல்டிவர்சிட்டி எனும் வார்த்தைபின் நவீனத்துவ வார்த்தைப்போல சித்தரிப்பதை நாம் கவனிக்க முடியும். ஆனால் இருபது வருடத்திற்கு முன்பாக கிளாட் ஆல்வாரிஸ், முஹம்மது இத்ரிஸ், ஆஷிஸ் நந்தி உள்ளிட்ட பல ஆளுமைகள் இணைந்து பன்மையக்கழக விதையைத்தூவும் போதே இந்த வார்த்தை புதிதல்ல புழக்கத்தில், செயல்வடிவில் உள்ள வார்த்தையென்று துவக்க உரையின் அச்சுவடிவத்தில் வாசிக்க முடிந்தது.

Soil Biology Workshop @ Bhoomi Chengam

Soil Biology Workshop @ Bhoomi Chengam

உயர்ந்த சிந்தனைகளை விதைத்து சென்றுள்ளார்கள், அவைகள் மரமாகி அறுவடை பக்குவத்தில் இருக்கின்றன. அறுவடையும், பொதுச்சமூகம் பயன்பெற வேண்டியது மட்டுமே பாக்கி , எதார்த்த வார்த்தைகளில் சொல்வதென்றால் போஸ்ட்மென் வேலைகளை செய்ய வேண்டியது தான் பாக்கி, அவ்வளவு விரிவான, ஆழமான வேலைகளை காலனிய ஆதிக்கதிற்கு எதிராக காந்தி முதல் நம்மாழ்வார் வரை செய்து வைத்துள்ளார்கள், முறையான திட்டமிடல், மண்ணுக்கேற்ற செயல்வடிவங்களாக மாற்றுவது, கொண்ட கொள்கையில் இம்மியளவும் சமரசம் செய்து கொள்ளாத நெஞ்சுரம், இவைகளைத்தான் பன்மையக்கழகம் அடிநாதமாக கொண்டுள்ளது.
இவர்களுள் நாம் நேரில் கண்ட சமரசமற்ற சிந்தனையாளர், செயற்பாட்டாளர் நம்மாவாரின் பெயரையன்றி வேறொன்றை சிந்திக்கமுடியாமல் ஒருமனதாக நம்மாழ்வார் பன்மையக்கழகம் எனும் பெயரை தேர்வு செய்தோம். பெயரை வைக்கும் போதே நம்மாழ்வார் எனும் பெயர் முள்கிரீடம் என்று ராம் அண்ணா எடுத்துச் சொன்னார், அது உண்மை எனும் ஒத்திசை வோடே இயங்குகிறோம். பன்மையக்கழகத்தின் வடிவம், கருத்துரு போன்றவைகள் குறித்து மருதம் குமார்,
சமன்வயா ராமசுப்ரமணியன் இருவரும் தொடர்ச்சியா உரையாடலுக்குப் பின்னர் நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொண்டு இணைந்து வேலை செய்ய வேண்டிய அவசியத்தை முன்வைத்தார்கள்.


2021 மார்ச் மாதம் குமார் அண்ணா தொடர்ச்சியாக தமிழகம் தழுவிய பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தக் கருத்துருவை பகிர்ந்து கொண்டு தக்க நண்பர்களை , தோழமை நிறுவனங்களை சந்தித்து மார்ச் இறுதிக்குள் இரண்டுமுறை குழு உரையாடல்கள், விவாதங்கள், பகிர்தல் என பன்மையக்கழக வேலைகள் சூடுபிடிக்கத் துவங்கியது, “நல்லதை விரைந்து செய்திடு” என்பதற்கு இசைவாக 5 ஜூன் 2021 சுற்றுச்சூழல் தினத்தன்று நம்மாழ்வார் பன்மையக்கழகம் துவக்க விழாவை இணையவழியில்
நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தை கொரானா ஏற்படுத்தியிருந்தது.


ஆனால் எங்கள் கனவோ இந்தியா முழுவதும் பயணம் செய்து, கிளாட், ரிம்போச்சி உள்ளிட்ட நடமாடும் பன்மையக்கழகங்களை நேரில் சந்தித்து அவர்களின் தற்போதைய கருத்துகள் மற்றும் பங்களிப்பிற்கு அழைப்புவிடுத்து இந்தியா மட்டுமல்லாது மல்டிவர்சிட்டி சார்ந்து இயங்கும் பல்வேறு நாடுகளை சார்ந்த நபர்கள், நிறுவனங்களை அழைத்து தமிழகத்தில் மிகச்சிறப்பாக வேலை செய்யும் தோழமைகளை அழைத்து இரண்டு நாட்கள் நிகழ்வாக திட்டமிட்டிருந்தோம். மார்ச் மாசம் உண்டாக்கிய நிகழ்வு
திட்டத்தை ஏப்ரலில் முறியடித்தது கொரோனா , ஆனால் திட்டமிட்ட தேதியில் துவங்குவது என ஒருமனதாக முடிவெடுத்து 5 ஜூன் 2021ல் நம்மாழ்வார் பன்மையக்கழகத்தினை துவங்கினோம்.


இரண்டு நாட்கள் நேரடி நிகழ்வை பல நாட்கள் இணையவழி Multiversity Orientation நிகழ்வாக நடந்தேறியது, கிளாட் ஆல்வாரிஸ், சுல்தான் அஹமத் இஸ்மாயில், மனிஷ்ஜெயின், ராமசுப்ரமணியன், புவிதம் மீனாட்சி , மருதம் குமார் என அனைவரும் இணைந்து பன்மையக்கழகம் என்றால் என்ன அதன் கருத்துரு செயற்பாடுகள் யாவை , குறுகிய, நெடுங்கால திட்டங்களை யாவை என்பதை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டோம்.

Assertive Peace Cohort one @ MSSW Chennai

Assertive Peace Cohort one @ MSSW Chennai

பன்மையக்கழகம் எனும் வடிவத்தை பார்த்து வியந்து உங்களோடு இணைந்து கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தை தெரிவித்து, நிதி சார்ந்த துணையும் செய்வதாக நண்பன் அமைப்பும் இணைந்து கொண்டது, நண்பன் அமைப்போடு இணைந்து வேலை செய்த நேரத்தில் அவர்கள் சொன்னது போல நிதி பங்களிப்பில் எந்தவித தொய்வுமின்றி இணைந்திருந்தனர், கருத்து ரீதியாக சில முரண் இருந்தது, இவ்வாறு நிதிக்காக மட்டும் இரண்டு நிறுவனங்கள் இணைய வேண்டியது பன்மையக்கழக கருத்துக்கு முரணாக இருந்ததால், கணக்கு வழக்குகளை சமர்பித்திவிட்டு நன்றியோடு விடைபெற்றுக் கொண்டோம்.


நம்மாழ்வார் பன்மையக்கழகமும் நிலைத்த வாழுமைக்கான நிறுவனம் – ஆரோவில் இணைந்து விதைத் திருவிழா , நான்கு நேரடி களப்பயிற்சிகள், கவிதா குருகந்தி அவர்கள் ஒருங்கிணைப்பில் வாசம் ஆந்திரா அமைப்பும் நம்மாழ்வார் பன்மையக்கழமும் இணைந்து “ஆடிப்பட்டம் தேடி விதை ” விதை சட்டம் விதை
இறையாண்மை குறித்து இரண்டு நாள் பயிற்சி , பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஐயாவின் “மண் உயிரியல்; மண்வாழ்வியல்” இரண்டு நாள் நேரடிப்பயிற்சி ஒன்றை பூமி செங்கம் மற்றும் நம்மாழ்வார் பன்மையக்கழகம் இணைந்து ஒருங்கிணைத்தோம்.
பூமி செங்கம் தங்குமிடம், உணவு செலவை ஏற்றுக்கொண்டதால் இரண்டு நாள் நிகழ்வுக்கு குறைந்த கட்டணமே பெற வேண்டுமென குழுவாக முடிவெடுத்தோம்.
எழுபது நபர்கள் அதில் பெரும்லான பங்கேற்பாளர்கள் இளைய விவசாயிகள், பன்மையம்கழக பயிற்சிகள் விவசாயிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் பெறக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.


இணைவழியாக கல்வி , சூழல், மருத்துவம், வாழ்வி யல், அரசியல் சார்ந்து முப்பதிற்கும் மேற்பட்ட வகுப்புகள், உரையாடல்களை ஒருங்கிணைந்தோம். காந்தி அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்து நிலைத்த அமைதி (Assertive Peace) மூன்றுமாத வகுப்பு ஒருங்கிணைத்தோம். பதினான்கு நபர்கள் பங்குபெற்றனர், இணையவழியில் பதினெட்டு தலைப்புகளில் உரையாடல் இருந்தது, இரண்டுமுறை நேரில் சந்தித்து நான்கு நாட்கள் உரையாடினோம், MSSW, Chennai, சமன்வயா இணைந்து ஒருங்கிணைத்த இரண்டு நாள் பசுமைப்பொருளாதாரம் நிகழ்விற்கு பதினைந்து நபர்களுக்கு உணவு,
தங்கும் வசதியோடு ஏற்பாடு செய்திருந்தனர்.


வழக்கமாக மேற்கத்திய கல்வி முறையிலிருந்து விடுபட்டு சுயசிந்தனை கல்வி முறையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதென்பது பன்மையக்கழகத்தின் தலையாய பணி, “அறம் என்பது சொல் அல்ல செயல்” என்பதை ஆணித்தரமாக நம்பும் நபர்கள் இணைந்து செயற்படுவதால், தடாலடியாக எந்த வேலையையும் அடையாளச்சிக்கலுக்க செய்ய வேண்டிய அவசியமோ , கட்டாயமோ இல்லாமல், மிகச்சுதந்திரத்தோடு, கடன் வாங்கப்பட்ட தகவலை , கருத்துக்களை நம்பியில்லாமல், கருத்திலும் செயற்பாட்டிலும் விடுதலை உணர்வை மையமாக வைத்தியங்கும் நிறுவனமாக வடிவமெடுத்திருக்கிறோம்.


மனிதன் சிக்குண்டு கிடக்கும் காலனிய, அடிமைத்தன கருத்துருவை , கல்வி முறையை அகற்றி , மண்ணுக்கேற்ற கருத்துக்களை செயல்பாடுகளை வடிவமைத்து, அதை பரவாலுக்கும் முயற்சிக்கு முன்னோடியாக இருந்த நபர்களில் ஒருவரான பேராசியர் சுல்தான் அஹமத் இஸ்மாயில் அவர்கள் நம்மாழ்வார் பன்மையக்கழத்திற்கு வேந்தராக இருந்து நெறி படுத்துகிறார்.


மருதம் குமார், நிர்வாக அறங்காவலர்
பார்த்தசாரதி , பொருளாளர்
பாஸ்கர் மணிமேகலை , இயக்குநர்.
அறங்காவலர்கள் : ராமசுப்ரமணியன், மீனாட்சி , சுபாஷினி , ரேகா , பிரேமா ,ஹிமா கிரண்